பெட்ரோல், டீசல் விலை மீண்டும் புதிய உச்சம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உறுதியளித்தபடி நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வழங்கவில்லை.

இதுமட்டுமின்றி, ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது.

மேலும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. எனினும் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கான உற்பத்தி வரியை குறைக்க மறுத்து விட்டது. ஒரு சில மாநில அரசுகள் மட்டும் வாட் வரியை சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 84. 49 ரூபாயாக உயர்ந்தது.

இதுபோலவே டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து 77.49 ரூபாயாக உயர்ந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இதுவரை இல்லாத ஒன்றாகும்.

Google+ Linkedin Youtube