‘பிக் பாஸ் 2’: நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றது யார்?

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றது யார்? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில், ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, மும்தாஜ், விஜயலட்சுமி ஆகிய 7 பேரும் போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றனர்.

 

இவர்களுடன், கடந்த சீஸனில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட சினேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, சுஜா வருணி, ஹார்த்தி மற்றும் டைட்டில் வென்ற ஆரவ் ஆகியோரும் தற்போது ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் இருக்கின்றனர். போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. எனவே, யார் யார் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள், யார் வெற்றி பெறுவார் என்ற ஆர்வம் தற்போதே பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்வதற்கான டாஸ்க் நேற்று தொடங்கியது. 7 பேருக்கும் ஒவ்வொரு வண்ண நீர் அடங்கிய பவுல் கொடுக்கப்பட்டு, அதில் இருந்து நீர் கீழே சிந்திவிடாமல் ஒரு வட்டத்தைச் சுற்றிவர வேண்டும்.

இந்தப் போட்டியில் 5 பேர் விலகிவிட, இறுதியாகக் களத்தில் நிற்பது யாஷிகாவும் ஜனனியும். அந்த இருவரில் யார் வெற்றிபெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்கிறார் என்பது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

Google+ Linkedin Youtube