“என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வந்தார் சாந்தினி”: சிரிஷ்

‘என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வந்தார் சாந்தினி’ எனத் தெரிவித்துள்ளார் சிரிஷ்.

சிரிஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப் படத்தில் சிரிஷ் ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். சிரிஷ் கேரக்டர் பெயர், ராஜா. சாந்தினி கேரக்டர் பெயர், ரங்குஸ்கி. தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சிரிஷ், “இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது அப்பாவியான ஒரு முகம் தேவைப்பட்டது. அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன்.

முதல் விஷயம், யுவன் சார் இசை தான் இந்தப் படத்துக்கு வேண்டும் என நான் ரொம்பத் தீவிரமாக இருந்தேன். தயாரிப்பாளர், இயக்குநர், நான் மூவரும் அவரைப் போய் சந்தித்தோம். அவர் கதையைக் கேட்டு, உடனே ஒப்புக் கொண்டார்.

சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குநர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.

Google+ Linkedin Youtube