“பிக் பாஸில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் அப்படித்தான்...”: மும்தாஜுக்கு ‘சரவணன் மீனாட்சி’ ரட்சிதா ஆறுதல்

‘பிக் பாஸில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் அப்படித்தான்...’ என மும்தாஜுக்கு ஆறுதலாகப் பேசியுள்ளார் ‘சரவணன் மீனாட்சி’ ரட்சிதா.

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். 9 முறை எவிக்‌ஷனுக்காக நாமினேஷன் செய்யப்பட்டு, ஒருவழியாக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார் மும்தாஜ். தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, யாஷிகா ஆனந்த், விஜயலட்சுமி ஆகிய 6 பேரும் போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருக்கின்றனர்.

இதில், ஜனனி நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 90 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில், இன்னும் இரண்டு வாரங்களில் வெற்றியாளர் யார் எனத் தெரிந்துவிடும். பொதுவாக, 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி, இந்த முறை 6 நாட்களுக்கு கூடுதலாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில், கடைசியாக வெளியேற்றப்பட்ட மும்தாஜுக்கு ஆறுதல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மீனாட்சியாக நடித்த ரட்சிதா. “பரவாயில்லை டார்லிங். நேரான மரங்களே முதலில் வெட்டத் தேர்ந்தெடுக்கப்படும். பிக் பாஸில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் அப்படித்தான்...

நீ உள்ளே இருக்க சரியான நேரமிது. உன் உள்ளுணர்வில் நீ எப்போதுமே தெளிவாக இருந்திருக்கிறாய். அதனால் இது கொண்டாட வேண்டிய நேரம். உன்னைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு நடுவில் நீ இருப்பதை விட, வெளியே வந்து உன்னைத் தொடரும் உண்மையானவர்களைப் பார். தொடர்ந்து புன்னகையோடு இரு. நீ ஒரு மாணிக்கம். ஏற்கெனவே ஒரு வெற்றியாளர் தான் நீ. என் நேர்மையானவளே... லவ் யூ” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரட்சிதா.

Google+ Linkedin Youtube