‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்...

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் இந்தப் படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா இணைந்துள்ளார். அஜித்துடன் மோதும் வில்லன் இவர்தான். நானி நடிப்பில் வெளியான ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

நேற்று ‘விஸ்வாசம்’ படத்தின் சில புகைப்படங்கள் கசிந்த நிலையில், தற்போது அஜித் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே (அஜய் குமார்) ஆகிய கேரக்டர்களில் நடித்தார் அஜித்.

‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால், எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

Google+ Linkedin Youtube