மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக நடிவர் விஜய்யை லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்புத் தேர்வு செய்துள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில் அவர்களது 100வது படமான மெர்சல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவானது.

3 தோற்றத்தில் இந்தப் படத்தில் விஜய் நடிக்க, அவரது ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூரியா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இசை வலுசேர்த்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு ஹாலிவுட் பட நடிகர்கள் பெயரும் விஜய் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு மெர்சல் திரைப்படத்திற்காக விஜய்யை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube