பிரதமர் மோடியின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ரிலையன்ஸுக்கு: காஷ்மீரில் கவர்னர் ஆட்சியின் முடிவால் ராகுல் காந்தி அதிர்ச்சி

குடியரசுத்தலைவர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.

இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது,

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தலைமை நிர்வாகம் செப்டம்பர் 20, 2018-ல் உத்தரவு எண் 406-எஃப்டியில் தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கான ரூ.6 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரிலையன்ஸ் வசம் ஒப்படைத்து ஒப்பந்தமிட்டது.

இந்தத் திட்டம் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு கட்டயமாகும். பென்ஷன் வாங்குபவர்களுக்கும் மற்ற பிரிவு பணியாளர்களுக்கும் அவர்கள் சுய தெரிவு சார்ந்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தம் பற்றி ராகுல் காந்தி கூறும்போது, “உங்களுடைய ‘எப்போதும் சிறந்த நண்பர்’ பிரதமர் இருக்கும் போது ரூ.1,30,000 கோடி ரபேல் ஒப்பந்தம், போதிய துறைசார் அனுபவம் இல்லாமலேயே கிடைத்து விடும். ஆனால் பொறுத்திருங்கள், அவசரப்பட்டு முடிவுக்கு வராதீர்கள், இன்னும் இருக்கிறது..

ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் 4 லட்சம் பேர்களும் இந்த மருத்துவக் காப்பீட்டை உங்கள் காப்பீட்டு நிறுவனத்தில்தான் வாங்கியே ஆகவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தப்படுவார்கள்” என்று ட்வீட்டில் சாடியுள்ளார்.

Google+ Linkedin Youtube