பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் வென்றனர்

2018 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களான வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் வென்றுள்ளனர்.

வில்லியம் நார்தாஸ் பருவநிலை மாற்றம் தொடர்புடைய பொருளாதார ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப் பெறுகிறார்.

நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவுவதற்கான கண்டுபிடிப்புகளுக்காக பால் ரோமருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பெற்றது குறித்து பால் ரோமர் குறித்து கூறும்போது, "மனிதர்கள் நினைத்தால் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்.  நாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்தால் நாம் ஆச்சரியப்படும் முடிவுகளைப் பெறலாம். நாம் நினைக்கும் அளவு இது கடினமானது அல்ல'' என்றார்.

Google+ Linkedin Youtube