ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இப்படம், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'தி இந்து' ஆங்கிலத்திடம் பேசிய பிரியதர்ஷினி, ''இந்தப் படம் இளம் நடிகையாக ஜெ. தனது வாழ்க்கையைத் தொடங்கியதில் இருந்து, மருத்துவமனையில் இருந்த கடைசி நாட்கள் வரை பேசும். படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் இன்னும் தயங்குகின்றனர். ஆனால் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கத் தைரியமாக முன்வந்தவர் நித்யா மேனன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. பிரியதர்ஷினி இயக்கியுள்ள ‘ஷக்தி’ படத்தில், பிரதான வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். எனவே, அவர்தான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube