வட்டிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காதது ஏன்?- ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை யின்போது குறைக்கும் வட்டியின் பலனை கடன் பெற்றுள்ள வாடிக் கையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் வங்கிகள் குறைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வீட்டுக் கடன், வாகனக் கடன், நுகர்வோர் பொருள்களுக்கு பெறப் பட்ட கடன்கள் மீது வட்டி குறைக்கப் படுவதில்லை என உச்ச நீதிமன்றத் தில் பல புகார்கள் தெரிவிக்கப் பட்டன. கடந்த 10 மாதங்களாக எவ்வித பதிலும் அளிக்காத நிலை யில் தற்போது இதற்கு உரிய விளக் கத்தை அளிக்குமாறு உச்ச நீதிமன் றம் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மணி லைப் அறக்கட்டளை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் கடிதத்தை அனுப்பியது, அதில் ரிசர்வ் வங்கி எப்போ தெல்லாம் தனது நிதிக் கொள்கை யில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கிறதோ அதன் பலனைச் சிறிய அளவில் கடன் பெற்றுள்ள வீட்டுக் கடன், கல்விக் கடன் மற்றும் நுகர்வோர் கடன் பெற் றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என்று குறிப்பிட் டுள்ளது. பெரும்பாலும் முன்னர் கடன் பெற்ற வாடிக்கையாளர் களுக்கு எவ்வித வட்டிக் குறைப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மணி லைஃப் அறக்கட்டளை வழக்கறிஞர், ‘‘பெரும்பாலும் வங்கி கள் இரண்டு வகையான வட்டி விகிதத்தைக் கடைப்பிடிக்கின்றன. முந்தைய கடன் பெற்றவர்களுக்கு அவர்கள் கடன் பெற்ற போது விதிக்கப்பட்ட வட்டி தொடர்கிறது. புதிதாக கடன் வாங்குவோருக்கு அப்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி வட்டி வசூலிக்கப் படுகிறது’’ என்று கூறினார். இது வங்கி செயல்பாடுகளில் பாரபட்ச மான நடைமுறை என்று சுட்டிக் காட்டிய அவர், இந்த வகையில் 1% வட்டிக் குறைப்பு செய்யாம லிருந்தால் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளுக்கு கூடுத லாக கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுழற்சி முறையிலான வட்டி விகிதத்தைப் (புளோட்டிங் ரேட்) பெரும்பாலும் வங்கிகள் செயல்படுத்துவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையில் எத்தகைய நட வடிக்கை எடுக்கப்பட்டது என்பதை ரிசர்வ் வங்கி ரகசியமாகவே வைத் துள்ளது என்று குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து, மனுதாரர் அளித்துள்ள புகார் குறித்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டது. ஆனால் இது வரையில் எவ்வித பதிலும் ரிசர்வ் வங்கி அளிக்கவில்லை. எனவே இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை நீதிமன்றத்துக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Google+ Linkedin Youtube