ஆசிய விளையாட்டு: இந்திய வீராங்கனை அசத்தல்

ப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கிளப் த்ரோ போட்டியின் எப்32/51 பிரிவில் இந்திய வீராங்கனை ஏக்தா 16.02 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை அல்காபி தேக்ரா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மோனு கன்காஸ் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். ஆண்கள் 200 மீட்டர் டி44/62/64 பிரிவில் இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் 3-வது இடத்தைக் கைப்பற்றி வெண்கலப் பதக் கத்தை வென்றார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

பெண்கள் 200 மீட்டர் ஓட்டத்தின் டி45/46/47 பிரிவில் இந்திய வீராங்கனை ஜெயந்தி பெஹரா 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

திங்கள்கிழமை நடைபெற்ற போட்டிகளில் மட்டும் இந்தியா 3 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றது. நேற்றைய ஆட்டத்தின் போது 3 தங்கம் உட்பட 11 பதக்கங்களை இந்தியா கைப் பற்றியது. 

Google+ Linkedin Youtube