இராக்கில் ஐஎஸ் தாக்குதல்: 17 பேர் பலி; 2 பேர் கடத்தல்

இராக்கின் மேற்குப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எரிவாயு  நிலையத்தின் காவலர்கள் 17 பேர் பலியாகினர்.

இதுகுறித்து இராக்  ஊடகங்கள், "இராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அன்பர் நகரில் உள்ள எரிவாயு நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எரிவாயு நிலையத்தின் 10 காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து  இன்று (வியாழக்கிழமை) நடந்த தாக்குதலில் 7 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கடத்த மாதம்தான் அன்பர் நகரத்தில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை இராக் அரசு கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தொடுத்துள்ளது.

இராக்கின் மொசூல் நகரை 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்த நகரை மீட்க இராக் அரசுப் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து  கடந்த சில ஆண்டுகளுக்காக கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறது.

இதில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை இராக் அரசு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube