ஏஐ நுட்பத்தில் எல்ஜி டிவி அறிமுகம்

ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய தொலைக்காட்சியைஇந்தியாவில் முதல் முறையாக எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது.

மிகத்தெளிவான காட்சிகள், மிகத்துல்லியமான ஒலி அமைப்புடன் இந்தத் தொலைக்காட்சிகள் உள்ளன. ஓஎல்இடி, சூப்பர் யுஎச்டி, யுஎச்டி மற்றும் ஸ்மார்ட் டிவி என பல்வேறு மாடல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 25 வகையான தொலைக்காட்சிகள் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 4கே ஜாஸ் என்ற தொலைக்காட்சியையும் அறிமுகம் செய்துள்ளது.

இவை ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்குவதால்  நமக்கு வேண்டியவற்றை வாய்ஸ் கமாண்டின் மூலம்சில நொடிகளில் இந்தத் தொலைக்காட்சிகள் தந்துவிடுகின்றன.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஹோம்என்டர்டெயின்மென்ட் பிரிவின் இயக்குநர் யூசுல் பார்க் இது குறித்துபேசுகையில், ஏஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த டிவி மாடல்கள் பொழுதுபோக்கில் புதியஅனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளும் எல்ஜி நிறுவனம்தொடர்ந்து, ஆராய்ச்சி மற்றும்மேம்படுத்தல்களில் அதிகளவிலான முதலீடுகளைச் செய்துவருகிறது. இதன் மூலம் ஒவ்வோராண்டும் தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய மதிப்புகளைக் கொடுத்துவருகிறது. இந்தத் தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சாதனங்கள், பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு என்றார்.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட தொலைக்காட்சிகள் 43  அங்குலம் முதல் 77 அங்குலம் வரையிலான அளவுகளில் கிடைக்கிறது. ஓஎல்இடி தொலைக்காட்சிகளின் ஆரம்ப விலை ரூ. 2.5 லட்சம். யுஎச்டி தொலைக்காட்சிகளின் ஆரம்ப விலை ரூ. 65,999.

Google+LinkedinYoutube