சண்டகோழி 2 படத்தை இந்த இடங்களில் வெளியிடக்கூடாது! தன் படத்திற்கு தானே தடை போட்ட விஷால்

லிங்கு சாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடி நடித்துள்ள சண்டகோழி 2 படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தில் இருந்து பாடல்கள், டீசர் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

அதே வேளையில் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பதவியாற்று வருகிறார். அதிலும் குறிப்பாக பைரசி மூலம் படங்கள் சட்ட விரோதமாக வெளியாவதை தடுத்து வருகிறார்.

இந்நிலையில் விஷால் தற்போது QUBE நிறுவனத்திற்கு நோட்டீஸ் விட்டுள்ளாராம். இதில் மங்களூரில் Cine polis, பெங்களூரில் சத்யம் தியேட்டரிலும் வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த லிஸ்டில் தமிழகத்தை சேர்ந்த 7 தியேட்டர்களும் இடம் பெற்றுள்ளதாம்.

Google+ Linkedin Youtube