சூப்பர் ஸ்டாருக்கு பிறகு அஜித் தான், முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் இப்போது விஸ்வாசம் படம் தயார் ஆகி வருகின்றது.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர, சமீபத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்த பில்லா பாண்டி இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பேசிய இயக்குனர் உதயகுமார் ‘சினிமாவில் நான் போன் செய்த ஒரு சில நொடிகளிலேயே எனக்கு ரெஸ்பான்ஸ் செய்வது ரஜினி சார் தான்.

அதன் பிறகு அப்படி ஒரு குணத்தை அஜித் தம்பியிடம் தான் பார்க்கிறேன், அவர் கண்டிப்பாக இந்த பில்லா பாண்டி படத்தை பார்த்தே ஆகவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube