தமிழ் நாவல் கதையில் தனுஷ்

தமிழ் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வருகிற புதன்கிழமை (அக்டோபர் 17) ‘வடசென்னை’ படம் ரிலீஸாக இருக்கிறது. மூன்று பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் இது. அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து உருவாக இருக்கின்றன. ஆனால், அதற்கு முன்பு வேறொரு படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைய இருக்கிறது.

‘வடசென்னை’ இந்த வாரம் ரிலீஸானதும், அடுத்த வாரம் இந்த புதுப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், எதைப் பற்றிய படம் இது என்பதைக் கூறியுள்ளார் வெற்றிமாறன். பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாக இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது.

Google+ Linkedin Youtube