நீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்

செய்தியாளர் : ‘நீங்க மலையாளி நடிகை எப்டி தமிழ்ல வரவேற்பு குடுத்தாங்க’

நடிகை : எல்லோரும் அப்டித்தான் நினைக்கிறாங்க. நான் மலையாளி மட்டுமில்ல. தமிழும் தான். அம்மா தமிழ்ங்கிறதால அம்மா பக்கம் எல்லாமே தமிழ் தான். அதும் இல்லாம இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம்

மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்டியில் கீர்த்தி சுரேஷ் சொன்ன வார்த்தைகள் இவை.

கீர்த்தி இப்படிச் சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. இங்க நிறைய நடிகர் நடிகைகள் ஆந்திரா போனா தெலுங்கு சினிமா பத்தியும் மலையாளம் போன மலையாளம் சினிமா பத்தியும் வசதியா பேசுவாங்க. ஆனா மலையாள நிகழ்ச்சியில இத சொன்னப்போ கீர்த்தி தனியா தெரிஞ்சாங்க. கலைக்கு மொழி கிடையாது தான். ஆனா அதோட சார்புக்கு மொழி இருக்கு. தமிழ் தெலுங்கு மலையாளம் னு சொந்தக்குரல்ல பேசி ஒவ்வொண்ணுலயும் சிறந்து நடிக்கிற வெகு சொற்ப நடிகைகள்ல கீர்த்தி முக்கியமானவர்.

எவ்ளோ வேணாலும் ட்ரோல் பண்ணலாம் ஹஹா போடலாம். ஆனா இன்னைக்கு தேதிக்கு தமிழ்ல எழுதப் படிக்கத் தெரிஞ்சு தெளிவா பேசி நம்ம கிட்ட லைம்லைட்ல இருக்கிற சமகால முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்போல்லாம் யாரும் யார வேணாலும் விமர்சிக்கலாம். அதுக்கு உரிமை இருக்கு. ஒரு கலைஞன அவன் படைப்புக்காக விமர்சிக்காம அவன் உருவத்துக்காக விமர்சிச்சா அதுக்கு பேர் வன்முறை. இந்த வன்முறையைப் பல பேர் செய்றாங்க. முகம் குடுத்து எதிர்கொள்றாங்க. ஆனா அத எதையும் பொருட்படுத்தாம நம்ம பயணத்துல முன்னேறிப் போறது தான் நம்ம வெற்றி. கீர்த்தி சுரேஷ் கிட்ட அந்த வெற்றி கிடைச்சிருக்கு.

'நடிகையர் திலகம்' படத்துல கீர்த்தி சுரேஷுக்கு சாவித்திரி கதாபாத்திரம்னு சொன்னதும் பல விதமான எள்ளல், சிரிப்பு, ஆச்சர்யம். எப்படி இவங்க சரிபட்டுவருவாங்கன்னு கேள்வி தான் எல்லாருக்கும். ஃபர்ஸ்ட் லுக் வந்தப்போ அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் என்னால முடியும்னு பதில சிரிச்சிட்டே

சொன்னாங்க. அப்டியும் சிலர் நம்பல. படம் வந்துச்சு. சாவித்ரிய அப்டியே கண்ணு முன்னாடி கொண்டுவந்தாங்க கீர்த்தி. யாரெல்லாம் அதுவரைக்கும் அவங்கள ட்ரோல் பண்ணாங்களோ அவங்களே ஆச்சர்யப்பட்டாங்க.

இப்டி நடக்குற ட்ரோல் எல்லாமே அவங்களுக்கும் தெரியும். தெரியாம இல்ல. இதப்பத்தி சமீபத்துல அவங்க கிட்ட ஒரு கேள்வி முன்வச்சப்போ

அவங்க சொன்ன பதில்ல அவ்ளோ முதிர்ச்சியும் பக்குவமும் இருந்துச்சு. "நீங்க ட்ரோல் பண்ணாலும் இல்லனாலும் நான் இப்டி தான் இருப்பேன். அதெல்லாம் திரும்பி பாத்துட்ருக்க முடியாது. போயிட்டே இருக்க வேண்டியது தான்" - இதான் அவங்க சொன்னது.

எல்லாருக்குள்ளயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். ஆனா அத எல்லா நேரத்துலயும் காட்டிக்க மாட்டாங்க. ஆனா அத முகத்துல எப்பவுமே தேக்கி வச்சுக்குற ஆற்றல் வெகுசிலருக்கு தான் இங்க இருக்கு. அப்டி ஒரு முகம் கீர்த்திக்கு. எப்பவுமே ஒரு வெள்ளந்தி சிரிப்பும் பார்வையும் அவங்க முகத்துல இருக்கும்.

வெகுளியா நடிக்கிறது, பேசுறது, ஆர்ப்பாட்டமில்லாம நடிக்கிறதுன்னு எல்லாத்துலயும் கீர்த்தி தனக்கென இடத்தைப் பிடிச்சிருக்காங்க.

மீம்ஸோ, ட்ரோலோ எல்லாம் அந்த நேர சந்தோஷத்துக்கு தான். சினிமாவும் அப்டித்தான். அதுல வன்முறை வேணாம்.

கீர்த்தி சுரேஷுக்கு ஒரு வேண்டுகோள்,

அன்பின் கீர்த்தி,

இங்க இருக்க பல ரசிகர்கள்ல நான் ஒரு கடைநிலை ரசிகன். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும். சும்மா காதல் பண்ணிட்டு, டூயட் பாடிட்டு, வில்லன்கிட்ட தப்பிச்சு ஓட்ற வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் மெட்டீரியல் நீங்க இல்ல. இதெல்லாம் ஆரம்பக் காலத்துல ஒரு பேர் கிடைக்கணும்னு பண்ற விஷயங்கள். நீங்களும் பண்ணிருக்கீங்க. இல்லன்னு சொல்லல. ஆனா இப்ப வேணாம். உங்களோட பலமும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

உங்க கெரியர் மஹாநடிக்கு முன் மஹாநடிக்கு பின்-னு மாறிடுச்சு. மத்த நடிகைகளுக்கு பத்து வருஷம் கழிச்சு கிடைக்கிற பிரேக் எல்லாம் உங்களுக்கு இப்பவே கிடச்சிடுச்சு. உங்க இடம் வேற. உங்களுக்குன்னு ஸ்கோப் இருக்க கதைகள் நிச்சயம் உங்களத்தேடி வரும். பொறுமையா தேர்வு செய்யுங்க. உங்க பலமே உங்க வெகுளித்தனம். சாதாரணமான ஆர்பாட்டமில்லாத நடிப்பு தான்.

நீங்க என்ன கமர்ஷியல் ஹீரோயினா இப்டி வந்து நடிச்சாலும் அது பிரச்சினை இல்ல. ஆனா உங்களுக்கு அதுல முக்கியத்துவம் இருக்கணும்.

அதனால, நீங்க உங்களுக்கு முக்கியத்துவம் இருக்க கதைகள தேர்ந்தெடுங்க. நடிகையர் திலகம் மாதிரி வேணும்னு கேக்கல. நீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்னு கேக்குறோம்.

நன்றி

நல்லா இருப்போம் ❤

Google+ Linkedin Youtube