வீட்டு பணியாளர், டிரைவரை பணக்காரர்களாக்கிய முதலாளி

வங்கியல்லாத நிதி நிறுவனமான கேபிடல் பர்ஸ்ட் நிறுவனம் ஐடிஎப்சி வங்கியுடன் இணைய உள்ளது. இந்த இணைப்புக்கு முன்பாக தன் னிடம் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட அளவு பங்குகளை ஒதுக்கி அவர்களை பணக்காரர் ஆக்கியுள்ளார் நிறு வனத்தின் செயல் தலைவர் வி. வைத்தியநாதன்.

தன் வசம் உள்ள 40.40 லட்சம் பங்குகளில் 4.29 லட்சம் பங்குகளை வீட்டு பணியாளர், டிரைவர் உள்ளிட்டோருக்கு பரிசாக அளித்துள்ளதாக பங்குச் சந் தைக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். தன்மீதும் நிறுவனத்தின் மீதும் அவர்கள் கொண்டிருந்த பாசத்திற்காகவும், நிறுவன முன்னேற்றத்துக்கு அவர் கள் ஆற்றிய பணிக்காகவும் பங்கு களை பரிசாக அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிறுவனம் ஐடிஎப்சி வங்கி யுடனான இணைப்பு நடவடிக்கை கள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். இந்த இணைப் புக்கு இருதரப்புபங்குதாரர்களும், ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித் துள்ளது. இந்த இணைப்பின்படி ஐடிஎப்சி வங்கி 10 பங்குகளுக்கு இணையாக 139 கேபிடல் பர்ஸ்ட் பங்குகளை வாங்கும்.

வைத்தியநாதன் தன்னிடம் உள்ள பங்குகளில் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் பணி யாளர்கள் 23 பேருக்கும், தனது நெருங்கிய நண்பர்களும் நிறுவனத் தில் பணியாற்றிய 3 பேர் மற்றும் இரு சகோதரர்கள், ஒரு சகோதரி, தனது மாமனார், மனைவியின் மாமா, 3 மைத்துனர்கள், இரண்டு கார் டிரைவர் மற்றும் மூன்று வீட்டு பணியாளர் ஆகியோருக்கு பங்குகளை அளித்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு பங்கின் விலை ரூ. 478.60 ஆகும். இதன்படி இவர் பரிசாக அளித்த பங்குகளின் மதிப்பு ரூ. 20.53 கோடி. வைத்தியநாதனின் சகோதரர் சத்தியமூர்த்தி வேம்பு வுக்கு அதிகபட்சமாக 26 ஆயிரம் பங்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

2008-ம் ஆண்டு பியூச்சர் கேபிடல் என்றிருந்த நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை வைத்தியநாதன் வாங்கினார். வார்பர்க் பின்கஸ் நிறுவனத்திடமிருந்து இந்நிறுவனம் வாங்கப்பட்டபோது நிறுவனம் ரூ. 29 கோடி நஷ்டத்தில் இருந்தது. இவர் பொறுப்பேற்ற பிறகு பெயர் மாற்றப்பட்டு 2018-ல் இந்நிறுவனம் ரூ. 327 கோடி லாபம் ஈட்டி யது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube