ஈரானுடன் தடையில்லா வர்த்தகம்: இந்தியா மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா 

இந்தியா-ஈரான் இடையிலான வர்த்தகம் தடையில்லாமல் நடக்க அமெரிக்கா வழிவகை செய்துள் ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இந்தியாவுக்கு இருந்த முக்கியமான தடைகளை அமெ ரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை நவம்பர் 5-ம் தேதியிலிருந்து ஆரம்பித்த நிலை யில், இந்தியாவுக்கு உள்ள சில முக்கிய தடைகளை நீக்கி யிருக்கிறது.

இந்த முடிவு ஈரான் மீதான பொரு ளாதார தடை அமலுக்கு வருவ தற்கு முதல் நாள் ட்ரம்ப் நிர்வாகத் தினால் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. போர்களால் நிலைகுலைந்து போயிருக்கும் ஆப் கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓமன் வளைகுடாவில் அமைக்கப் படும் சபார் துறைமுகம் மற்றும் ரயில் பாதை கட்டமைப்புகளில் இந்தியா வின் பங்களிப்பு முக்கியமாக இருப்பதை உணர்ந்த அமெரிக்கா, இந்தியா மீது விதித்த தடைகளை விலக்கிக் கொண்டுள்ளது.

2016 மே மாதம், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று நாடுகளும் வர்த்தக செயல்பாடு களுக்காக சபார் துறைமுகத்தை செயல்படுத்த தொடங்கின. இந்த சபார் துறைமுகம், ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த் தகத் துக்கு வழிவகுப்பதாக உள்ளது.

இதற்கிடையில் ஈரான் மீது தடை விதிக்கப்பட்டதால், சபார் துறைமுகத்தின் நிலை கேள்விக் குறியானது. சபார் துறைமுகம் ஆப் கானிஸ்தானின் பொருளா தாரத்தை சீரமைக்கும் முக்கிய அம்சமாக இருப்பதால் அதன் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று தற்போது அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறுகையில் “அதிபர் ட்ரம்பின் தெற்கு ஆசிய உத்திகளில் ஒன்று ஆப்கானிஸ்தானின் பொரு ளாதார வளர்ச்சி மற்றும் மேம் பாட்டை ஊக்குவிப்பது. இதில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து குறிப்பிடத்தக்க பங் காற்றுகிறது. சபார் துறைமுகம் ஈரா னின் அணு ஆயுதம் உள்ளிட்ட பிற ஆதாயங்களுக்காகப் பயன் படுத்தப்படாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சபார் துறை முகத்தின் அவசியம் உணர்ந்து அதனுடன் இந்தியாவுக்கு தொடர் புடைய தடைகளை விலக்கியிருக் கிறோம்” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு சரியானது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Google+ Linkedin Youtube