டீசல் விலை உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் கடும் போராட்டம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது போலீஸார் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பொதுமக்கள் வீசினர்.

டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்ற னர்.

இதையடுத்து பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிஸில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிஸீசை போலீஸார் நேற்று முன்தினம் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்து அனுப்பினர். இதனால் போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுபோன்ற மோதல் ஏற்படும் என எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே, போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் அங்கு வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசின\ர்.

இதேபோல், பிரான்ஸ் முழு வதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தினர்.

இதையடுத்து சில போராட்டக் காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீஸாரின் தடுப்பு களை உடைத்தனர். மேலும் போலீஸார் மீது அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள், ஓட்டல்களுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர்.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

போராட்டம் நடத்துபவர்களுக்கு மாற்றம் தேவையில்லை. நாட்டின் முன்னேற்றம் தேவையில்லை. அவர்களுக்குத் தேவை நாட்டில் குழப்பமான சூழ்நிலைதான். பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம். இதற்காக பிரதமர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்” என்றார்.

Google+ Linkedin Youtube