கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 50% அதிகரிப்பு: சிபிடிடி தலைவர் சுஷில் சந்திரா தகவல்

கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித் துள்ளதாக நிதி அமைச்சக அதி காரி தெரிவித்தார்.

இந்தியத் தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய மத்திய நேரடி வரி வருவாய் ஆணையத்தின் தலை வர் சுஷில் சந்திரா இது குறித்து மேலும் கூறியதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு கிடைத்த மிகப் பெரிய பலன் இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கையை அதிக அளவு உயரக் காரணமே பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான். இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 6.08 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நேரடி வரி வசூல் பிரிவு நிர்ண யிக்கப்பட்ட இலக்கை நிச்சயம் எட்டும் என்று குறிப்பிட்ட அவர் இந்த ஆண்டு நேரடி வரியாக ரூ. 11.5 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேரடி வரி வருவாய் வளர்ச்சி யானது 16.5 சதவீதமாகவும் ஒட்டு மொத்த வளர்ச்சி 14.5 சதவீதமாக வும் உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை விரி வடைந்துள்ளது. அதேபோல வரி வசூல் அளவும் அதிகரித் துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட வரி வசூல் எதிர்பார்ப்பில் இதுவரை 48 சதவீத அளவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வெளிநாடுகளில் பணம் பதுக் கல் செய்வது தொடர்பான தகவலை பகிர்ந்து கொள்ள 70 நாடுகள் முன் வந்துள்ளதாக அவர் கூறினார். பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு கார்ப்பரேட் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 7 லட் சத்திலிருந்து 8 லட்சமாக அதிகரித் துள்ளதாக அவர் கூறினார்.

நேரடி வரி வசூல் சட்டம் குறித்த கொள்கைகளை வகுக்கும் சிபிடிடி அமைப்பானது இன்னும் ஓராண் டில் நான்கு மணி நேரத்தில் இ-பான் (மின்னணு நிரந்தர கணக்கு எண்) வழங்கும் என்று குறிப்பிட்டார்.

இப்போது புதிய நடைமுறை உருவாக்கி வருகிறோம். அதன்படி ஆதார் அடையாள அட்டையைக் காண்பித்தால் நான்கு மணி நேரத் தில் பான் அட்டை வழங்கும் நிலையை ஓராண்டில் உருவாக்கி விடுவோம் என்றார்.

வருமான வரித்துறை 2 கோடி பேருடைய வருமானத்தை ஆய்வு செய்து, அவர்களது வருமானத் துக்கு பொருந்தாத வகையில் விவரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப் பப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வரி தாக்கல் செய்துள்ளனர். அந்த விவரங்கள் தவறாக உள்ளன. மற்ற வர்கள் வருமானம் இருந்தும் வரி தாக்கல் செய்யாமல் உள்ளனர் என்றார்.

வருமான வரித்துறையில் அதி காரிகளின் குறுக்கீடுகளைக் குறைக்கும் விதமாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி 70 ஆயிரம் விண்ணப் பங்கள் ஆன்லைன் மூலமாகவே ஏற்கப்பட்டுவிட்டன என்று குறிப் பிட்டார்.

வரி தாக்கல் செய்தவர்களில் 2.27 கோடி பேருக்கு ரீஃபண்ட் அளிக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் என்றும் கூ றினார்.

கார்ப்பரேட் வரியைக் குறைக் கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. கார்ப்பரேட் வரி குறிக்கப்படும்பட்சத்தில் நமது வரிவிகிதம் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.

சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு லாக்கரில் ரூ. 25 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தத் தொகை உரிய வரி செலுத்தியபிறகு லாக்கரில் வைக்கப்பட்டதா என்பது குறித்து நிர்வாக ரீதியான விசாரணை நடை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

திங்கள் கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் சாந்தினி சௌக் பகுதியில் திடீர் சோதனை நடத் தினர். அப்போது அங்கிருந்த தனி யாருக்குச் சொந்தமான 300 லாக்கரில் ரூ. 25 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Google+ Linkedin Youtube