வைரலாகும் விராட் கோலியின் பயிற்சி வீடியோ; பாராட்டும் கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது.

இந்த நிலையில்,  அடிலெய்டில் நாளை முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கேப்டன் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.  

அந்த வீடியோவில்,  பந்து வீசப்பட கோலி அதனை  நாலா பக்கமும் சிதறடிக்கிறார்.  இந்த வீடியோவை  தற்போது சமூக வலைதளங்களில் பலரும் குறிப்பிட்டு கோலியின் பேட்டிங் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.

சேம் பில்லிங்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் கோலியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வீடியோவைக் குறிப்பிட்டு கோலியின் பேட்டிங்கைப் பாராட்டி பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஃபைசல் இக்பால் தனது  ட்விட்டர் பக்கத்தில், ''கோலி இந்த கிரகத்தில் இருந்து வரவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் தன்னை பேட்டிங்கில் மெருக்கேற்றிக் கொண்டிருக்கிறார்'' என்று பதிவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube