ஃபோர்ப்ஸ் 2018 இந்திய பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, விஜய், ரஹ்மான், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதியின் இடம்?

ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள  2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் தமிழ் நடிகர்களான ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் பிரபலங்கள் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 11-வது இடத்திலும், (வருமானம் ரூ.66 கோடி) தமிழ் நடிகர்களான ரஜினி 14 ஆம் இடத்திலும் (வருமானம் ரூ.50 கோடி) , விஜய் 26 ஆம் இடத்திலும் ( வருமானம் ரூ.30 கோடி) , விக்ரம் 29 ஆம் இடத்தில் (வருமானம் ரூ.26 கோடி) உள்ளனர்.

சூர்யாவும், விஜய் சேதுபதியும் 34-வது இடத்தில் உள்ளனர். இவர்கள் வருமானம் ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில்  முதல் மூன்று இடங்களில் சல்மான் கான், விராட் கோலி, அக்‌ஷய் குமார் ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் முறையே ரூ.253 கோடி, ரூ.228 கோடி, ரூ.185 கோடி ஆகும்

ஃபோர்ப்ஸின் இந்தப் பட்டியல் ஓராண்டுக்கான வருவாய் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் புகழின் அடிப்படையில்  வெளியிடப்படுகிறது.

Google+LinkedinYoutube