பிலிப்பைன்ஸ் வெள்ளம்: 85 பேர் பலி

பிலிப்பைன்ஸில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட  நிலச்சரிவால்  இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் பணி அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) கூறும்போது, ''பிலிப்பைன்ஸில் கடுமையாகப் பெய்த கனமழையினால் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் இதுவரை  விசயாஸ், பிஸ்கோல் ஆகிய பகுதிகளில் 85 பேர் பலியாகியுள்ளனர்.

சர் மாகாணத்தில் நிலச்சரிவினால் கிட்டத்தட்ட 50 வீடுகள் சரிந்துள்ளன. பலர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி நடந்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 25,000 பேர் அவர்கள் இருப்பிடப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்டு  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை அந்நாடு வருடத்துக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட புயல்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு டைபோன் புயல் தாக்கியதில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube