சினிமாவில் மதுரைக்காரன் என்றால் அரிவாள் எடுப்பவன் என்று தவறாகச் சித்தரிக்கின்றனர்: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் தனியார் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

“விளையாட்டுத்துறையில் 8-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தோல்வியை கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் சாதிக்கலாம். மாரத்தான் போட்டியில் சிறுவர் - சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும்.

மதுரை மாநகரம், தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக மற்றவற்றுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. சினிமாவில் மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர். ஆனால் உண்மையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள்” இவ்வாறு கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

Google+ Linkedin Youtube