தனுஷ் பாடலை முந்திய சாய் பல்லவி பாடல்: யூடியூபில் சாதனை

யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'ஃபிடா' என்ற தெலுங்குப் படத்தின் பாடல்.

சாய் பல்லவி, வருண் தேஜ் நடிப்பில், 'ஹாப்பி டேஸ்' புகழ் சேகர் காமுல்லா இயக்கத்தில் வெளியான காதல் படம் 'ஃபிடா'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஷக்திகாந்த் கார்த்திக் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். சாய் பல்லவிக்கு இதுதான் முதல் தெலுங்குப் படம். இதில் சாய் பல்லவியின் நடிப்பு விமர்சகர்களின் பாரட்டைப் பெற்றதோடு, பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்தப் படத்தின் 'வச்சிந்தே' என்ற பாடல் தற்போது யூடியூபில் 17.4 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா பாடல் என்ற சாதனையை இதன் மூலம் இந்தப் பாடல் எட்டியுள்ளது. 

இதற்கு முன், 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான '3' படத்தின் 'வை திஸ் கொலவெறி பாடல்' தான் இந்தச் சாதனையை எட்டியிருந்தது. தற்போது 'வை திஸ் கொலவெறி' பாடல் 17.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதை முந்தியுள்ளது சாய் பல்லவியின் பாடல். 

Google+ Linkedin Youtube