ரசிகர் மன்றத்தினருக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை; நீக்கப்பட்டவர்களை ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் சேர்க்காதீங்க!

மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து உடனே நீக்கிவிடுங்கள். எக்காரணம் கொண்டும் குரூப்பில் சேர்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை, வாட்ஸ் அப் குரூப்பில் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் அப் குழுக்கள் என்று இருக்கின்றன. அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் அப் குழுக்களில் அவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக குரூப்பில் இருக்கவேண்டும். பிற மாவட்ட உறுப்பினர்களை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது. வாட்ஸ் அப் குரூப்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்க்கவேண்டும்.

அதேபோல், மனதுக்குத் தோன்றுகிற பெயர்களில் எல்லாம் வாட்ஸ் அப் குரூப்கள் சேர்க்காமல், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரிலேயே வாட்ஸ் அப் குரூப்கள் இருக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube