ஏலியன்களிடமிருந்து பூமிக்கு வந்த சிக்னல்

ஏலியன்களிடமிருந்து பூமிக்கு ரேடியோ சிக்னல் ஒன்று வந்திருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தப் பிரகாசமான பால்வழி அண்டத்தில் பூமியில் மட்டும்தான் மனிதர்கள் இருக்கிறார்களா? இல்லை பிற கிரகங்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா? போன்ற கேள்விகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன.

இதில் வேற்றுகிரக வாசிகள் உள்ளனர் என்றும் பிற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இல்லை என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.இந்த நிலையில் தற்போது வேற்றுகிரக வாசிகள் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், வேற்று கிரகத்திலிருந்து அல்லது பால்வழி அண்டத்தின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து வேற்றுகிரக வாசிகளிடமிருந்து ரேடியோ அலை சிக்னல் வந்திருப்பதாகவும், அந்த சிக்னல் குறிப்பாக எங்கிருந்து வந்துள்ளது என்பதைக் கணிக்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கனடாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் வேற்று கிரக வாசிகளிடமிருந்து பல ஒளி ஆண்டுகள் கோடி தூரத்திலிருந்து அமானுஷ்யமான சிக்னல் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கனடா வானியல் ஆராய்ச்சியாளர்கள், ''இந்த ரேடியோ சிக்னல் சுமார் 3 வாரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஒளிக்கற்றைகள் புதிய ரேடியோ தொலைநோக்கியில் கண்டிபிடிக்கப்பட்டதாக கனடா வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவை எங்கிருந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்'' என்று கூறினர்.

ஏலியன்களிடமிருந்து சிக்னல் வருவது இது முதல் முறையல்ல என்றும், இதற்கு முன்னரும் இம்மாதிரியான சிக்னல்கள் வந்ததாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Google+ Linkedin Youtube