பொலிவியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி

லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் வடகிழக்கு மலைப்  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”பொலியாவில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகரின் லா பாஸ்ஸின் வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் குழந்தைகளும் அடக்கம்.  பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் சேதமாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று பொலிவியா அரசு தெரிவித்துள்ளது.

Google+ Linkedin Youtube