திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி

'96' படத்தில் 100-வது நாள் விழாவில் திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து சுமார் 100 நாட்கள் கடந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இவ்விழாவில் '96' படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர். இதில் விஜய்சேதுபதி பேசியதாவது:

இவ்விழாவிற்கு திருமுருகன் காந்தி வருகைத் தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ்.நான் எதிர்பார்க்கவில்லை. அவரை காதலைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரியரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது.

அது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படித்த ,புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள்.

என்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். எல்லா நல்ல விஷயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

இயக்குநர் பிரேம்குமார் சாருக்கு நன்றி. த்ரிஷா மாதிரியான அழகான பெண்ணைப் பார்க்கவில்லை என்றால் படைத்தவனுக்கு பண்ற துரோகம் என நினைக்கிறேன். கடவுளிடம் ஏன்பா எனக்கு கண்ணு வைச்ச என்று கேட்டதற்கு, அழகான பெண்ணைப் பார்க்க என்றார். அதனால் தப்பில்லை.

'96' படத்தைப் பற்றி நாங்கள் நிறையப் பேசி, வேறு வண்டி ஏறி கிளம்பிவிட்டோம். ஆனால், '96' என்கிற வண்டியில் இன்னும் ஏறி பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருடைய அன்புக்கும், ரசனைக்கும் மிகப்பெரிய நன்றி.

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Google+ Linkedin Youtube