அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை: தலிபான்கள்

வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜல்மாய் கலில்ஜாத்துடன் கடந்த சில மாதங்களாகவே தலிபான் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

இதுகுறித்து ஷேர் முகமது அப்பாஸ் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ''ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும். அதுவரை தலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை.

அமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக இருக்கிறது. இறுதியாக இதற்குத் தீர்வு எட்டப்படும் என்று கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

Google+ Linkedin Youtube