ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பைக்காக வலுப்படுத்த வந்து விட்டார் ரிக்கி பாண்டிங்

டேவிட் சாகெர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியின் உதவிப்பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன் அணியின் முந்தைய சகாவான ஜஸ்டின் லாங்கருடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

2003 மற்றும் 2007 ஆகிய உலகக்கோப்பையை பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. வரவிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு பாண்டிங் உதவிப்பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார்.

இது குறித்து பாண்டிங் கூறிய போது,  “உலகக்கோப்பைக்காக மீண்டும் அணியுடன் இணைவது உற்சாகமூட்டுகிறது, முன்பு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுடன் குறுகிய காலத்திற்காக பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் உலகக்கோப்பை என்பது எனக்கு வேறு பொருள் தருகிறது, தேர்வாளர்களுக்கு தற்போது தேர்வு செய்ய கிடைத்திருக்கும் வீரர்கள் மீது எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது இந்த உலகக்கோப்பையில் எங்களை வீழ்த்துவது கடினம்.

தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் போது, “உலகக்கோப்பையை வெல்வதற்கு என்ன தேவை என்பதை ரிக்கி அறிவார். உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தைத் தக்க வைக்க விரும்புகிறோம். கிரிக்கெட் ஆட்டம் பற்றிய பாண்டிங்கின் புரிதல் அலாதியானது. அவர் அணியுடன் விரைவில் களத்தில் இறங்குவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.

Google+ Linkedin Youtube