பாம்பைக் காட்டி மிரட்டி வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனேசிய காவல்துறை

திருடன் என்று சந்தேகிக்கப்பட்ட பப்புவா மனிதரை பாம்பைக் காட்டி மிரட்டி வாக்குமூலம் பெற இந்தோனேசிய காவல்துறை முயன்றது. இதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததை

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது பப்புவா பகுதி. இங்கு மொபைல் போன்களைத் திருடியதாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார். அவரைக் கைவிலங்கிட்டு விசாரித்த காவல்துறை, அந்நபரின் கழுத்து மற்றும் மணிக்கட்டில் இரண்டு மீட்டர் நீள பாம்பைச் சுற்றியது. பாம்பின் தலை மனிதனின் முகத்துக்கு முன்பாக வருமாறு அமைக்கப்பட்டது.

பயத்தில் சம்பந்தப்பட்ட நபர் உறைந்து போய் நிற்க, அதிகாரிகள் எத்தனை முறை திருடினாய் என்று கேள்வி எழுப்பினர். 1 நிமிடம் 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு இந்தோனேசிய காவல்துறை மன்னிப்பு கோரியது. எனினும் விஷமில்லாத பாம்பைத்தான் பயன்படுத்தினோம். பாம்பை வைத்து கடிக்க வைக்க முயற்சிக்கவில்லை என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே வீடியோவை வைரலாக்கிய மனித உரிமைகள் ஆர்வலர் வெரோனிகா கோமன், ''விசாரணை முறைகள் வன்முறை நிறைந்ததாக உள்ளது. காவல்துறை விதிகள் மட்டுமின்றி, சட்ட விதிகளையும் இது மீறியுள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Google+ Linkedin Youtube