‘என்.ஜி.கே.’ டீஸர் பார்த்துட்டேன், வெறித்தனமா இருக்கு: கார்த்தி

‘என்.ஜி.கே.’ டீஸர் பார்த்துட்டேன், வெறித்தனமா இருக்கு எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே.’  சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பில் இருந்த இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இதன் டீஸர் ரிலீஸாக இருக்கிறது.

கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ள ‘தேவ்’ படம், வருகிற 14-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அந்தப் படத்துடன் ‘என்.ஜி.கே.’ டீஸரை திரையரங்கில் கண்டு ரசிக்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் சூர்யா படத்தின் டீஸர் என்பதால், அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ‘தேவ்’ படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள கார்த்தி, ‘என்.ஜி.கே. டீஸர் பார்த்துட்டேன், வெறித்தனமா இருக்கு எனத் தெரிவித்துள்ளார். அவர் அப்படிச் சொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Google+ Linkedin Youtube