சவுதி இளவரசர் பாக் பயணம்: 5 லாரிகளில் அனுப்பப்பட்ட பொருட்கள்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்  பாகிஸ்தான் செல்ல இருக்கிறார்.  இந்த நிலையில் இளவரசருக்கு தேவையான பொருட்கள் 5 லாரியில் அனுப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,  ”சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பயணம் இந்தவாரம் செல்ல இருக்கிறார். இந்த  நிலையில் சவுதி இளவரசருக்கு தேவையான பொருட்கள் 5 லாரியில் இஸ்லாமாபாத்  அனுப்பப்பட்டுள்ளது. இதில் இளவரசரின் உடற்பயிற்சி சாதனங்கள், நாற்காலிகள் ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இரண்டு நட்சத்திர ஓட்டல்கள் இளவசர் சல்மான், சவுதி அதிகாரிகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீட்டில், சவுதி இளவரசர் தங்கலாம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

சவுதி இளவரசராக முகமது பின் சல்மானின் முதல் பாகிஸ்தான் பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் சவுதியின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சல்மான் பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.

சவுதி பத்திரிகையாளர் கொலைக்குப் பிறகு சவுதி இளவரசர் சல்மா மீது பரவலான விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் இளவரசரின் பாகிஸ்தான் பயணம் அரசியல் ரீதியான முக்கியதுவம் வாய்ந்ததாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube