சிவகார்த்திகேயனுடன் நடிக்க இவானா ஒப்பந்தம்

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்துக்கு இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'Mr.லோக்கல்' படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் நடைபெறவுள்ளது. 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன் ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இவானாவையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இவர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கவுள்ளார். எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார்

Google+ Linkedin Youtube