திமுகவா, ஐஜேகேவா?- சந்தேகமும்.. பிரச்சாரமும்..

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படாத நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடி மகன் ஆதரவாளர்களும், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆதர வாளர்களும் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டனர்.

திமுக கூட்டணியில் திமுக 20 தொகுதி களிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 20 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன. எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, கள்ளக்குறிச்சி தொகுதி யில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டி யிடப் போவதாகவும், அவருக்கு வாக்கு கேட்டும், அவரது புகைப்படம் மற்றும் உதயசூரியன் சின்னத்தோடு சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

இதற்கிடையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவதாகவும், அக்கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் உதய சூரியன் சின்னத்தில் அங்கு போட்டியிடப் போவதாக வும் பேச்சு அடிபடு கிறது.

இதையடுத்து, அவரது புகைப்படம், உதய சூரியன் சின்னத்தோடு, சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள்.

இதுகுறித்து இரு தரப்பு கட்சி நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘கள்ளக்குறிச்சி தொகுதி திமுகவுக்கா, இந்திய ஜனநாயக கட்சிக்கா என்பது திமுக தலைமை அறிவித்த பிறகே தெரியவரும்.

ஆனால், இருவரில் யாராக இருந்தாலும், உதய சூரியன் சின்னத்தில்தானே போட்டியிடுவார். நாங் கள் இப்போது வாக்கு கேட்பது உதயசூரியனுக்கு தான்.. வேட்பாளர்களுக்கு அல்ல’’ என்று, கேட்பவர்களே அசரும்படி ஒரு விளக்கம் தருகின்றனர்.

Google+ Linkedin Youtube