156 பேர் பலியான எத்தியோப்பியா விமான விபத்து: விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்ட விமானி

இந்தியர்கள் உட்பட 156 பேர் பலியான எத்தியோப்பியா ஏர்லைன்ஸின் விமானி தான் விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில்  விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்.

இந்த விமான விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள்.

தவிர கனடா நாட்டைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அந்த  விமானத்தை ஓட்டிய விமானி சில பிரச்சனைகளை எதிர் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எத்தியோப்பியா விமானம் நிறுவனத்தின் சிஇஒ  அதிகாரி  டிவோல்ட் கூறும்போது, “ விபத்துக்குள்ளான விமானத்தில் எந்த தொழில் நுட்ப குறைப்பாடும் ஏற்படவில்லை. விமானியின் தரவுகளும் நல்ல நிலையிலேயே உள்ளன. 

 விமானி விபத்துக்குள்ளாவதற்கு முன்னர், அந்த விமானத்தின் விமானி தான் விமானத்தை செலுத்துவதற்கு சில பிரச்சனைகளை எதிர் கொள்கிறார் என்றும், திரும்பி வர இருப்பதாக அந்த விமானி குறிப்பிட்டு இருக்கிறார்  என்று தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube