ரசிகர்களைக் காப்பாற்றிய விஜய்: வைரலாகும் வீடியோ

'தளபதி 63' படப்பிடிப்பின்போது தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் சரிந்து வேலி மீது விழுந்ததில் அவர்களை விஜய் காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் 'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறை விஜய் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைக் காண ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் படை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பார்க்க  வந்த ரசிகர்களை விஜய் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் வேலியின் மீது விழுந்தனர்.

அப்போது விஜய் உட்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து அனைவரும் வேலியைத் தாங்கிப் பிடித்து ரசிகர்களைக் காப்பாற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Google+ Linkedin Youtube