நியூஸிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூடு போல் இங்கு நடந்திருந்தால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவுதான் இருக்கும்: மெஹ்பூபா முப்தி கருத்து

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு  மசூதியில் இன்று நண்பகலில் மர்ம நபர்கள் திடீரென நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் இதில் சுமார் 49 பேர் பலியாகினர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் போல் இங்கு நடந்திருந்தால் நம் அரசியல் தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும். போர்வெறி பிடித்துப் பேசும் ஆளும் அரசியல் தலைமை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலை ஆதரித்திருக்கும்.

இது குறித்து மெஹ்பூபா முப்தி தன் ட்விட்டரில், “அந்தத் தாக்குதலிலிருந்து நாம் ஒன்றிரண்டு பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே சம்பவம் இங்கு நடந்திருந்தால், தலைமை அதனை அரசியலாக்கியிருக்கும், போர்வெறியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை மறைமுகமாக ஆதரித்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

28 வயது ஆஸ்திரேலினான பிரெண்டன் டர்ட்டான் மசூதித் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளான்.  தாக்குதாலை 17 நிமிட வீடியோவாக நேரலையும் செய்துள்ளான்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன்  என்று தெரிகிறது.

Google+ Linkedin Youtube