ஆண்டுக்கு 30 லட்சம் டன் பிளாஸ்டிக் உபயோகம்- கோக கோலா நிறுவனம் தகவல்

குளிர்பானங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த கோக கோலா நிறுவனம் ஆண்டுக்கு 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருள்களைபேக்கேஜிங்கிற்கு பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஒருநிமிடத்துக்கு 2 லட்சம் பெட் பாட்டில்களை அந்நிறுவனம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எலென் மாக் ஆர்தர் என்ற சமூக ஆர்வலர் வலியுறுத்தி வருகிறார். இவர் தான்நடத்திவரும் அறக்கட்டளை மூலமாக நிறுவனங்கள் பயன்படுத்தும்பிளாஸ்டிக் அளவை தெரிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டுவந்தார். இதுவரை எந்தத் தகவல்களையும் வெளியிடாமல் இருந்த கோக கோலா நிறுவனம் தற்போது 2017-ம் ஆண்டில் 30 லட்சம் டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது.

உலக அளவில் ஆண்டுக்கு 50,000 கோடி பெட் பாட்டில்கள்உற்பத்தியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்தில் ஒருபங்கை (10,800 கோடி) கோக கோலா பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்தும் 31 நிறுவனங்களில் கோக கோலாவும் ஒன்று. மார்ஸ், நெஸ்லே, டனோன் உள்ளிட்டவை அதிக அளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ள 150 நிறுவனங்களில் பெப்சி, ஹெச் அண்ட் எம், லோ ரியல், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், பர்பெர்ரி ஆகியனவும் அடங்கும்.

இப்போதுதான் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக மாக்ஆர்தர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து வருகின்றன என்று ஆர்தர் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube