மிசோரமில் சட்ட விரோதமாக குடியேறி 16 கிராமத்தை உருவாக்கிய வங்கதேசத்தினர்

மிசோரம் மாநிலத்தில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி 16 கிராமங்களை அமைத்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மிசோரம் சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.லால்ரின்லியானா அளித்த பதில் வருமாறு:

தெற்கு மிசோரம், லுங்லேய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 16 கிராமங்களை அமைத்துள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களால் மாநிலத்தில் மேலும் 9 கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் வசிக்கின்றனர். அய்ஸ்வால் மாவட்டத்தில் 4, மியான்மர் எல்லையை ஒட்டிய சம்பாய் மாவட்டத்தில் 3, திரிபுரா எல்லையை ஒட்டிய மமித் பகுதியில் 2 என இந்த 9 கிராமங்களும் அமைந்துள்ளன என்றார்.

Google+ Linkedin Youtube