ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பங்கஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இதுவரை ஸ்டெர்லைட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பு வகித்த பி.ராம்நாத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் தவிர குழுமத்தின் பிற நிறுவனங்களான மால்கோ எனர்ஜி லிமிடெட் (எம்இஎல்), ஃபுஜைரா கோல்ட் (எஃப்இஸட்ஹெச்) ஆகிய நிறுவனங்களையும் இவர் கவனித்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிமங்கள் துறையில் 29 ஆண்டு அனுபவம் கொண்டவர் பங்கஜ் குமார். டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், மிட்டல் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 8 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் சிஇஓ பொறுப்பு வகித்த ராம்நாத், பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் நிறுவனத்தின் ஆலோசகராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube