திரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

விக்ராந்த் ஹீரோவாக நடித்து 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தாக்க தாக்க’. இந்தப் படத்தை இயக்கியவர் விக்ராந்தின் சகோதரரான சஞ்ஜீவ். இவர், மறுபடியும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

இந்தப் படத்துக்கு, விஜய் சேதுபதி வசனம் எழுதினார். ஆனால், அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து வேறொரு படத்தை இயக்குகிறார் சஞ்சீவ். இந்தப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் விஜய் சேதுபதி. ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு ஏற்கெனவே விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்துடன் சேர்ந்து நடிப்பதை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ள விஷ்ணு விஷால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

Google+ Linkedin Youtube