இந்து குழும தலைமை நிதி அதிகாரி நம்பி ராஜனுக்கு விருது

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்து குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) மற்றும் நிறுவன செயலரான நம்பி ராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.

நிறுவனங்களின் வரி நிர்வாக முறையை சிறப்பாக செயல்படுத்தும் நிதி அதிகாரிகள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஆண்டுதோறும் கவுரவிக்கப்படுகின்றனர். தொடர்ந்து 9-வது ஆண்டாக இந்த விருதை இந்து குழுமத்தின் நிதி அதிகாரி பெறுவது குறிப்பிடத்தக்கது. நிறுவன வரி நிர்வாகம் மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) சிறப்பாக செயல்படுத்தியவர்கள் பிரிவில் நம்பி ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊடகத் துறையில் ஜிஎஸ்டி முதல் முறையாக அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

45 நாட்களுக்குள் உள்ளீடு வரி வரவு உள்ளிட்டவிவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்றவுடன் நம்பி ராஜன் கூறியது: ஜிஎஸ்டி நடைமுறைக்கேற்ப அனைத்து செயல்பாடுகளையும் மாற்றுவதோடு புதிய வரிவிதிப்பு முறையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டியி ருந்தது. நிதித்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும்யிலும் இதை செயல்படுத்த வேண்டி யிருந்தது. இந்த விஷயத்தில் நிர்வாகம் முழு சுதந்திரம் அளித்ததோடு, நிபுணர்களை நியமிக்காமல் எனது திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்தி ருந்தது. அத்துடன் எனது சக பணியாளர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் 2017, ஜூலை 1 ஜிஎஸ்டி அமலான தினத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதால் இதை எளிதாக அமல்படுத்த முடிந்தது என்றார்.

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய, நேபாளம், பூடான் பிரிவின் மூத்த பிரதிநிதி ஆண்ட்ரேயஸ் பாவர் இந்த விருதை நம்பி ராஜனுக்கு வழங்கினார்.

நம்பிராஜன் கடந்த ஆண்டு நிறுவனங்கள் கையகப்படுத் தல், இணைத்தல் உள்ளிட்ட பிரிவில் இவ்விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நிதித் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் நம்பி ராஜன். இவர் இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்ட் (ஐசிஏஐ) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்ட் மேனேஜ் மென்ட் அக்கவுன்ட்ஸ் அமைப்பு களில் உறுப்பினராக உள்ளார்.

Google+ Linkedin Youtube