அரவிந்த் சாமிக்கு வில்லனாக நடிக்கும் `

புதிய படமொன்றில் அரவிந்த் சாமிக்கு வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன்.

‘கடல்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரியான அரவிந்த் சாமி, ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே, தொடர்ந்து ‘போகன்’ படத்திலும் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தார்.

ஆனால், அதன்பிறகு வில்லனாகத் தொடராமல், ஹீரோவாக நடித்து வருகிறார். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர், ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், வில்லனாக நடிக்க அர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இருவரும் நடித்த ‘கடல்’ படத்திலும் அர்ஜுன் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube