சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் இந்தியப் பாதிரியாருக்கு 6 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இந்தியப் பாதிரியாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், ''இந்தியாவைச் சேர்ந்த ஜான் பிரவீன் என்ற பாதிரியார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம் தகாத முறையில்  நடந்து கொண்டதற்காக அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆறு ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் 3 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் பிரவீன் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் தேவாலயப் பணிக்காகச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டனை பெற்ற பிறகு ஜான் பிரவீன் நீதிமன்றத்தில் கண்ணீர்  மல்க கூறும்போது, ''பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நான் என் மன்னிப்பைக் கோருகிறேன். மன்னிப்பு இதற்கு சரியாகாது என்று எனக்குத் தெரியும். இனி நான் யாரையும் துன்புறுத்த மாட்டேன்'' என்றார்.

Google+ Linkedin Youtube