பணமதிப்பு நீக்கத்தின் போது நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி வங்கி வாசலில் கியூவில் நின்றனரா?- ராகுல் காந்தி

பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் தங்கள் பணத்துக்காக வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானியா நின்றனர் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி மீது தன் விமர்சனத்தைத் தொடர்ந்தார்.

அசாம் மாநிலம் லக்மிபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மெஹுல் சோக்சி, நிரவ் மோடி, அனில் அம்பானியா பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கியின் வாசலில் நீண்ட வரிசையில் நின்றனர்,  நீங்கள்தான் கால்கடுக்க நின்றீர்கள்.  இந்தியாவின் திருடர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நம் காவலாளி உதவியுடன் நாட்டை விட்டுப் பறந்தனர்.

நீங்கள் எப்போதாவது, எங்காவது நம் காவலாளியை விவசாயிகள் வீட்டு வாசலிலோ, தொழிலாளர்கள் வீட்டு வாசலிலோ பார்த்திருக்கிறீர்களா? ஆனால் கவுதம் அதானி வீட்டு வாசலிலும் அனில் அம்பானி வீட்டு வாசலிலும் ஏராளமான காவலாளிகள்.

கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக்க் கொண்டு வந்து அனைவரது கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் மோடி, ஆனால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா அது வெறுஜ் ஜும்லா என்று அம்பலப்படுத்திவிட்டார்.

அஸாம் குடியுரிமை மசோதா நிச்சயமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேறாது. காங்கிரஸினால்தான் அந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவில்லை.

குறைந்தபட்ச வருவாய்க்கான ஆண்டுக்கு ரூ.72,000 ரூபாய் நாட்டின் 20% ஏழைக்குடும்பங்களின் பெண்கள் கணக்கில் வங்கிகளில் சேர்க்கப்படும். நாட்டின் 5 கோடி குடும்பங்களுக்கு இந்த உதவி பொருளாதாரத்தை புத்துணர்வுப்படுத்தும்.

இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.

Google+ Linkedin Youtube