360 இந்திய மீனவர்களை விடுவிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 360 பேரை அந்நாடு விரைவில் விடுதலை செய்ய உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவில் மோதல் அதிகமாகியிருந்தது.இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள  இந்திய மீனவர்கள் 360 பேர் விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''பாகிஸ்தான் இந்தியாவைச் சேர்ந்த 360 மீனவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் தங்களது தண்டனைக் காலத்தை சிறையில் கழித்தவர்கள். இவர்கள் அனைவரும் ஏப்ரல் நான்காம் தேதியிலிருந்து 4 பிரிவுகளாக விடுதலை செய்யப்பட உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானி இந்த நடவடிக்கை மும்பையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஜதின் தேசாய் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ இருவரும் தங்களிடம் உள்ள  பிடிப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாது இரு நாட்டினரும் சிறையில் உள்ள மீனவர்களின் உடல் நிலையை கண்டறிய மருத்துவர்களை அனுமதிக்க வேண்டும்” என்றார்.


Google+ Linkedin Youtube