ஏமனில் பள்ளியருகே குண்டுவெடித்து 7 குழந்தைகள் பலி: சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதலா?

ஏமனில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பள்ளியருகே இருந்த 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாவும் பொதுமக்களில் 54 பேர் படுகாயமுற்றதாகவும் மருத்துவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்குண்டுவெடிப்புக் காரணம் சவூதி கூட்டுப்படை காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகம்எழுந்துள்ளது.

இதுகுறித்து உயரதிகாரிகள் தெரிவிக்கையில், ''ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ள இவ்வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் பள்ளிக்கூடம் அருகே இருந்த ஒரு கிடங்கிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் அருகே இருந்த 7 குழந்தைகள் உயிரிழந்தனர். பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்'' என்றனர்.

தலைநகர் சனா, 2014லிருந்து ஹைவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால் அப்பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விபத்து குறித்து கிளர்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், ''சவூதி தலைமையிலான கூட்டு விமானப்படையின் இலக்குக்கு கிடங்கும் அருகிலுள்ள பள்ளிக்கூடமும் சேதமடைந்துள்ளது'' என்று கூறியுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கூட்டுப்படை தரப்பிலிருந்து எவ்வித உடனடி கருத்தும் வரவில்லை. ஈரானிய பிணைப்பு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து 2015லிருந்து இக்கூட்டுப் படை தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.

Google+ Linkedin Youtube